பகல்கொள்ளையில் பார்மா கம்பனிகள்

பகல்கொள்ளையில் பார்மா கம்பனிகள்


சிறப்பாயிரம்

சலாம் தோழர்களே!நாணும் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்திற்கு தேவையான உருப்படியான கட்டுரை(!!) எழுதி நம்ம மக்கள்கிட்ட  ஏதாச்சும் சொல்லி,ஒரு பிரபல பதிவர்(?) ஆகிடனும்னு எவ்ளோ முக்குனாலும்,மண்டையில எலிப்புழுக்கை அளவு கூட எதுவுமே தோணமாட்டங்குது.சரி என்னதான் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்ப,என்னோட கண்ணுக்கு சிக்குச்சி,என் பழைய கம்பனியோட விளம்பரம்.நா ஒரு பார்மா மார்க்கெட்டிங்ல சேல்ஸ் ரெப்பா இருந்தா காலத்துல,பொய் பொய்யா சொல்லி டாக்டர்கிட்ட போனி பண்ண மருந்தப்பத்தியே எழுதுனா என்ன?அப்படினு என்னோட ஆர்க்கிமிடிஸ் மூளைக்கு தோணுனதும்,யுரேகா!யுரேகா னு உங்க முன்னாடி வந்துட்டேன்.கட்டுரைய படிச்சிட்டு ஆர்க்கிமிடிஸ கல்லால அடிச்ச மாதிரி,என்ன சொல்லால அடிச்சிடாதிங்க!!!


 உங்களுக்கு காய்ச்சல்ணா என்ன செய்விங்க? நேரா மெடிக்கல் ஷாப் போவிங்க!அடிக்கிற காய்ச்சல்ல பெட்ஷிட்டே பத்திகிச்சினு அங்க இருக்க சுமாரான பிகர்கிட்டோயோ,இல்ல சூப்பரான ஆன்டிகிட்டயோ அளந்து விடுவிங்க(பெண்கள் யாரேனும் இந்த வரிகளைப்படித்தால் படித்தால்,உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து அடிக்காமல்,மாற்றான் வீட்டு பிள்ளையாக என்னை பாவித்து மன்னித்துவிடவும்).அவங்க உடனே ஒரு சின்ன சைஸ் ட்யூப்லைட் மாத்திரை இரண்டும்,கூடுதலா உங்களுக்கு சளி,தலைவலி,இருமல் மாதிரியான பம்பர் பரிசு விழுந்திருக்கானு கேட்டு இன்னும் இரண்டு மாத்திரையும் சேர்த்து கொடுத்துட்டு 20 ரூபா னு சொல்லுவாங்க.நம்மளும் பணத்த குடுத்துட்டு வந்துடுவோம்.ஒரு வேளை மாத்திரைய சாப்டதும் கொஞ்சம் நல்லா இருக்கும்.அத்தோட சரி,அந்த மாத்திரைய வீட்டுல எங்கயாச்சும் தூக்கிப்போட்டுட்டு,நம்ம வேலையப்பாக்க போய்டுவோம்.


 இப்போ,நீங்க ஒரு ரெகுலரா பஸ்ல,தினமும் பயணம் செய்றிங்க.அந்த பஸ்ல நீங்க போற இடத்துக்கு டிக்கெட் 8 ரூபானு உங்களுக்கு தெரியும்.ஆனா,அம்மாவோட அதிர்ச்சி அறிவிப்பு இல்லாம,உங்ககிட்ட 8ரூபா டிக்கெட் பதிலா 10 ரூபானு சொல்லி கண்டக்டர் சொன்னா,உங்களுக்கு என்ன தோனும்?இடனே அவன பிடிச்சி செவுனி சேத்து இரண்டு அப்பு அப்பி,’யாராடா ங்த்தா ஏமாத்தப்பாக்குற?எங்க ஆபிஸ்க்கும் வீட்டுக்கும் மட்டும்தான்டா நா இளிச்சவாயன்,உனக்கு எப்படிடா அது தெரிஞ்சது’னு சிவதாண்டவம்,ருத்ர தாண்டவம்,கோச்சடையான் தாண்டவம்னு எல்லா தாண்டவமும் ஆடத்தோனும்.ஆனா அதப்பண்ணாம,நாம சேப்டியா காந்தித்தாத்தா வழிய பின்பற்றி பொறுமையா பேசுவோம்.அந்த கண்டக்டர் ரொம்ப பேசுனா இறங்கி அந்த கன்டக்டரோட பேரன் பேத்தில ஸ்டார்ட் பண்ணி,செத்த அவங்க ஆயா,பாட்டிலாம் மனசுல திட்டிகிட்டே அடுத்த பஸ்ல வருவோம்.பிரபு மாதிரி புரட்சிப்போராட்டம் செய்றவங்களா இருந்தா,அந்த கண்டக்டர் மேல நாம போக்குவரத்துக்கழகத்துல கம்ப்ளேன்ட் பண்ணி உண்டு இல்லனு ஆக்கிடுவோம்.என்ன,அதுக்கு நாம கொஞ்சம் பணம் செலவழிக்கனும்.சனியன் பணம் போனா என்ன?நமக்கு மானம் தான முக்கியம்(அப்டிலாம் வெளிய சொல்லிகிட்டு,எவ்ளோ புடுங்கப்போறானுங்களோ இவனுங்க னு நெஞ்சு பூறா ‘பக் ப்க் ப்க்’னுதான் இருக்கும்.கவலப்படாதிங்க,நீங்க அந்த இடத்துல உங்கள கேப்டன் மாதிரியோ,இளைய தளபதி மாதிரியோ,ஆக்சன்கிங்  மாதிரியோ நினைச்சுக்கங்க.நாமாளும் இந்த சமூகத்துக்காக போராட பிறந்த வீரர்னு நினைச்சிங்னா,உங்களுக்கு தானா பழகிடும்). 


சரி,இப்போ மேட்டர் என்னன்னா,நீங்க மேல மெடிக்கல் ஷாப்ல வாங்குன,மருந்துகள் விலைங்ற பேர்ல அடிக்கற கொள்ளைய பத்திதான் இப்போ சொல்லப்போறேன்.கொள்ளைனா திமுக கொள்ளை,காங்கிரஸ் கொள்ளைலாம் இல்ல.ஸ்பெக்ட்ரம் ஊழல்,காமன்வெல்த் ஊழல்,ராணுவ உழல்னு அத்தனையும் ஊதித்தள்ளிடும்படியா,மருந்து கம்பனிகள் கொள்ளையடிச்சிட்டு இருக்காங்க.இத தடுக்க வேண்டிய கவர்மென்ட்டு,வழக்கம்போல சாத்த சூத்திகிட்டு வேடிக்கை பாக்றாங்க.(புது கவர்மென்ட் என்ன செய்வாங்கனு தெரில.பாப்போம்) எப்பிடியா மருந்து விலைல கொள்ளையடிக்கிறாங்க?பாவம் அவனுங்க விக்கிற காய்ச்சல் மாத்திரையே 2 ரூபா தான்.அதுக்கு அவன் சிலிக்கான் பேப்பர போட்டு,மூடி பேக்கிங் பண்ணி,உத்தரகாண்டத்துலோயோ,மத்திய பிரதேசத்துலேயோ தயாரிச்சு இங்க கொண்டுவந்து விக்கிறான்,அதுக்கே இந் ரெண்டு ரூபா பத்தாது,நீ என்னடானா,எங்க கிட்ட அவனுங்கள பத்தி,பத்திவைக்கிறியானு யாரும் காண்டாக வேண்டாம். 


உங்களில் பலருக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்கலாம்.காய்ச்சலுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையில் உள்ள வேதிப்பொருள் ‘பாராசிட்டாமால்’,அதே போல் சளிக்கு ‘சிட்ரிசைன் மற்றும் பெனில்பெரின்’.தொண்டைவலிக்கு ‘அசித்ரோ மற்றும் எரித்ரோமைசின்’.உடல்வலிக்கு ‘அசிக்ளோ மற்றும் டைக்ளோபினாக்’. 


நாம் ஒரு மாத்திரையை மெடிக்கல் ஷாப்பில் வாங்குகிறோம்.அவர்கள் எங்கே வாங்குவார்கள்?ஒரு சின்ன விளக்கம்.நாம் பள்ளிகாலத்தில் விலங்கியல் பாடத்தில் ‘உணவுச்சங்கிலி’ என்பதைப்பற்றி அட்லீஸ்ட் பொம்மையிலாவது பார்த்திருப்போம்.அதில்,காட்டில் உள்ள புல்லை மானும்,மானை நரியும்,நரியைச்சிங்கமும் சார்ந்து வாழும் என சொல்லியிருப்பார்கள்.அதே போன்ற ஒரு பணச்சங்கிலி தான் இங்கும். 




 இந்த வரிசையில் முதலில் இருப்பது,உற்பத்தி செய்யும் கம்பனிகள். தொழில் உபகரணங்கள்,மூலப்பொருட்கள் இறக்குமதி செய்தல் போன்ற செயல்கள் மூலம் மருந்துப்பொருளை உற்பத்தி செய்கின்றனர்.இவர்கள் வெறும் உற்பத்தி (production)வேலையை மாத்திரமே செய்வார்கள்.இவர்களுக்கு எவ்வகையிலும் நஷ்டம் என்பதே பெரும்பாலும் கிடையாது.அதேபோல் பெரிய அளவில் லாபமும் இருக்காது.


அடுத்தது மார்க்கெட்டிங் கம்பனிகள்.இவர்கள் தான் கொள்ளை அடித்தாலும்,குலம் அழிந்தாலும்,பொறுப்பேற்கும் வகையறா!இவர்கள்,மேலே உற்பத்தி செய்யும் கம்பனிகளிடம் இருந்து பொருட்களை வாங்கி ,இவர்கள் ஒரு பெயரால் ரிஜிஸ்டர் செய்து விற்பார்கள்.இப்போது ஒரு மார்க்கெட்டிங் கம்பனி ஒரு உற்பதி செய்யும் கம்பனியிடம்,பாராசிட்டாமால் மாத்திரை வாங்குகிறது.அது PARASIP என்ற பெயரில் அதை விற்கும்.இன்னோரு மார்க்கெட்டிங் கம்பனியும் அதே உற்பத்தியாளரிடம் இருந்து,அதே மாத்திரையை வாங்கி,ACECPARA என்ற பெயரில் விற்கும்.பொருள் ஒன்றுதான்,ஆனால் பெயர் வேறு வேறு.இவர்கள்தான்,சேல்ஸ் ரெப்,ஏரியா மேனேஜர்,ரிஜினல் மேனேஜர்,சோனல் மானேஜர்,நேஷனல் மேனஜர்,மார்க்கெட்டிங் மானேஜர் போன்றவர்களை நிறுவி,அவர்கள் மூலம் க,தங்களின் பொருட்களை டாக்டரிடம் பேசி,மெடிக்கல் ஷாப்பில் வைப்பார்கள்.


ஒருசில பெரிய கம்பனிகள் (எ.கா-சன் பார்மாசிட்டிகல்ஸ்,ரேன்பாக்ஸி,தெமிஸ் பார்மாசிட்டிகல்ஸ்,சிப்ளா),தாங்களே உற்பத்தியும் செய்து,தாங்களே மார்க்கெட்டிங்கிலும் ஈடுபடுகிறார்கள்.இவர்களில் பெரும்பான்மையோர் MNC என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் கம்பனிகள்.


அடுத்து CNF என்றழைக்கப்படும் மாநில ஸ்டாக்கிஸ்டுகள்.இவர்களுக்கு தமிழில் எவ்வாறு அழைப்பார்கள் எனத்தெரியாததால் CNF என்றே சொல்லிவிடுகிறேன்.அதாவது,மேலே மார்க்கெட்டிங் செய்யும் கம்பனிகள்,தங்களின் மருந்துப்பொருளை,ஒரு மாநிலத்திற்கு ஏற்ற அளவு விற்பதற்காக,பிடிக்கும் பெரிய ஸ்டாக்கிஸ்டுகள்.இப்போது தமிழ்நாடு எனில்,அங்குள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ,இங்கிருந்து தான் பிரித்து அனுப்புவார்கள்.பெரும்பாலும் ஒரு மாநிலத்திற்கு ஒருவர் தான் இருப்பார்கள்.ஆனால் பெரிய கம்பனி எனில்,இரண்டு CNF கூட இருப்பார்கள்.இவர்களின் வேலை,ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஸ்டாக்கிஸ்டுகளுக்கு,மருந்துகளை அனுப்புவது.அடுத்து ஸ்டாக்கிஸ்டுகள்.இவர்கள்,மாவட்ட அளவில் இருப்பார்கள்.இவர்கள் எண்ணிக்கை ,அவர்களின் கவரேஜ் ஏரியாக்களைப்பொறுத்து மாறும்.இப்போது உதாரணத்திற்கு சென்னை போன்ற பெருநகரங்களில்,5 அல்லது 6 ஸ்டாக்கிஸ்டுகளுக்கு மேல் இருப்பார்கள்.இவர்களிடம் இருந்து தான் மெடிக்கல் ஷாப்பிற்கு செல்லும்.இதில் ஒரு சேல்ஸ் ரெப்பின் வேலை என்பது மாவட்ட ஸ்டாக்கிஸ்டுகளிடம் இருந்து ஆர்டர் வாங்கி ,CNF ன் மூலம் செயல் படுத்துவது மற்றும்,வாங்கிய ஆர்டரை,மருத்துவர்களைப்பார்த்து அவர்களிடம் பேசி,ஸ்டாக்கிஸ்டுகளிடம் இருக்கும் மருந்துப்பொருட்களை விநியோகிப்பது.


 நீங்கள் மருத்துவமனையில்,உங்கள் நேரத்தை பிடுங்க வந்திருப்பதாக நினைக்கும் ஒரு சேல்ஸ் ரெப்பின் மாத சம்பளம் சராசரியாக எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறிர்கள்?ஒரு லோக்கல் பார்மா கம்பனியில் இப்போதைய நிலவரப்படி அடிப்படை சம்பளமே 15000.எனக்கு ஒரு MNC கம்பனியில் வந்திருந்த வேலைவாய்ப்பில்,அவர்கள் இன்சென்டிவ் மற்றும் அலவன்ஸ்களுடன் சேர்த்து 450000 தருவதாக கூறினார்கள்.மாதம் 5 லட்சம் வரை சம்பளம் மட்டும் வாங்கும் மார்க்கெட்டிங் மானேஜரை எனது முன்னால் கம்பனியில் பார்த்திருக்கிறேன்.அவ்வாறெனில் கம்பனிகளின் சம்பாத்யம் எவ்வளவு இருக்கும் என கணக்குப்போட்டு பாருங்கள்.


இப்போது நாம் காய்ச்சல் மாத்திரைக்கான விலைப்பட்டியலைக்காணலாம்.இரண்டு ரூபாய் விற்கும் ஒரு காய்ச்சல் மாத்திரையின் மூலக்கூறு பொருள்களின் விலை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?வெறும் 10 பைசா.இரண்டு ரூபாய் என விற்கும்ஒரு மாத்திரை தயாரிக்க ஆகும் மூலப்பொருளின் செலவு வெறும் 10 பைசா.அவ்வாறு தயாரிக்கப்பட்ட அந்த மாத்திரை பேக்கிங் மற்றும் டெலிவரி செலவுகளுடன் சேர்த்து 25 பைசா ஆகும்.அதாவது,ஒரு மாத்திரை,உத்தரகாண்டில் தயாரிக்கப்பட்டு அது சென்னையை வந்து அடையும் போது அதற்கான செலவு வெறும் 25 பைசா தான்.இப்போது இதற்கான வரி 15 சதவீதம் சேர்த்துக்கொண்டால் 30 பைசா.CNF ல் இதன் விலையானது கம்பனி லாபத்துடன் சேர்த்து 1.20 ரூபாய்க்கு வரும்.அதாவது மார்க்கெட்டிங் செய்யும் கம்பனிக்கு கிட்டத்தட்ட 90 பைசா முதல் 1 ரூபாய் வரை லாபம்.CNF லிருந்து ஸ்டாக்கிஸ்டை அடையும் போது அவர்களுக்கு 20 சதவீதம் என கணக்கு செய்து 1.35 பைசாவுக்கு வரும்.அங்கு இருந்து மெடிக்கல் ஷாப்பை அடையும்போது 1.60 பைசா(20 சதவீதம்) லாபத்துடன் செல்லும்.கடைசியில் 20 சதவீதம் லாபத்துடன்,2 ரூபாய்க்கு நம்மை வந்தடையும்.

மற்ற பொருட்களும் இந்த மாதிரிதான் கொள்ளையடிக்கிறாங்க என்று உங்களுக்கு தோன்றினால் இதோ விளக்கம்.பெப்ஸி,கோக் போன்ற குளிர்பானத்தின் லாபங்களைவிட இது 30 மடங்கு அதிகம் ஆகும்.அந்த குளிர்பானங்கள் கூட,நமக்கு தேவையெனில் வாங்க மட்டும்தான்.ஆனால் மருந்துபொருட்களோ அப்படியில்லை.நாம் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும்.ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரையில் எவ்வளவு சம்பாத்தியம் கிடைக்கிறது என்பதைப்பாருங்கள்.இதேபோல் இன்னும் எவ்வளவு நோய்கள் மற்றும் மருந்துகள்?அதற்கு எவ்வளவு கொள்ளை நடக்கும்?மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கைப்படியுங்கள்.

http://www.scribd.com/doc/49518002/Chapter-10-Costing-and-Pricing-of-a-Drug-Formulation 

http://en.wikipedia.org/wiki/Paracetamol#Pharmacokinetics 

உலகில்,அதிகளவு பார்மா கம்பனிகள் நடமாடுவது இந்தாயாவில் தான்.காரணம் இந்திய மக்களின் அறியாமை மற்றும் எளிதான சட்டம்.இந்தியாவைப்பொறுத்தவரை,வெறும் 10 லட்சம் முதலீடு இருந்தால்.நீங்களும் பார்மா மார்க்கெட்டிங் ஆரம்பித்துவிடலாம்.அதன்காரணமாக,இதுவரை ஏறத்தாழ 4600க்கும் மேற்பட்ட உற்பத்தி செய்யும் கம்பனிகளும் 10000க்கும் மேற்பட்ட மார்க்கெட்டிங் கம்பனிகளும் இந்தியாவில் உள்ளன.ஆண்டிற்கு 15 சதவீதம் வளர்ச்சியுடன் வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.இதில் முண்ணனியில் இருக்கும் ஒரு கம்பனி,தன் மருந்துகளை புகழ்பெற்ற டாக்டர்களிடம் விற்பதற்காக ,மார்க்கெட் இழந்த நடிகைகளைக்கூட்டி குடுக்குமாம்.இவர்களின் வருமானம் மற்றும் முதலீடுகளை,கீழே உள்ள விக்கிப்பீடியா லிங்கில் படித்தால் உங்களுக்கு தலைசுற்றல் வந்து மீண்டும் மெடிக்கல் ஷாப்பிற்கு செல்ல நேரிட்டாலும் இடும்.

http://en.wikipedia.org/wiki/Pharmaceutical_industry_in_India 

இன்று இந்திய ஷேர் மார்க்கெட்டில் டாப் 100ல் இருக்கும் அனைத்துநிறுவனங்களையும் கணக்கில் எடுத்தால்,அதில் பார்மா கம்பனிகள் மட்டும் 40ஐ தாண்டும்.அதாவது இந்திய முதலீடுகளில் ஏறத்தாழ பாதிக்குபாதி இவர்களின் கையில்தான்.இவர்களின் ஷேர் ரேஞ்ச்களை கீழே உள்ள லிங்கை அழுத்துப்பாருங்கள்.

http://www.moneycontrol.com/stocks/top-companies-in-india/market-capitalisation-bse/pharmaceuticals.html 


இவர்களுக்கு எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது என்று யோசித்தால் மிகவும் சிம்பிள்,எல்லாம் நம்மகிட்ட இருந்து சுருட்டிய பணங்களே! சரி,இவர்கள் மருந்தை இவர்களா விலையை நிர்ணயிக்கிறார்கள் என்றால் அதுவுமில்லை.விலையை நிர்ணயிப்பது மத்திய அரசின் NPPA(NATIONAL PHARMACEUTICAL PRICING AUTHORITY).இவர்களால் 2013 மார்ச் அன்று கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம் DPCO(DRUG PRICE CONTROL UNIT).இதன்மூலம் மருந்து கம்பனிகளின்,கொள்ளையைத்தடுக்க முடிவெடுத்தது மத்திய அரசு.இச்சட்டத்தின் மூலம் மக்களின் அத்தியாவசிய மருந்துப்பொருட்களில் பல,சரியான விலைக்கு விற்கும்படி ஆனையிட்டது.ஆனால் இச்சட்டம் இன்னும் சரியானபடி நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை..இதைப்பற்றிய விவரங்களுக்கு இந்த லிங்கை அழுத்துங்கள்.

http://www.nppaindia.nic.in/index1.html

இச்சட்டத்தின் மூலம்,OFLAXCIN என்றழைக்கப்படும் டானிக்கின் விலை கிட்டத்தட்ட 65 ரூபாயிலிருந்து 8 ரூபாய்க்கு மாற்ற ஆனையிட்டது அரசு.ஆனால் கொள்ளையார்கள்,மிக புத்திசாலித்தனமாக,அந்த OFLAXCIN மருந்துடன்,இச்சட்டத்தின்கீழ் வராத இன்னொரு மருந்தை சேர்த்து,இப்போது 70 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இதில் சில மருந்து கம்பனிகள்,இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கீட்டமைன் எனும் அறுவைசிகிச்சைப்பொருளை,அரசுக்குத்தெரியாமல் தயாரித்து,அந்தமான் வழியாக மற்ற நாடுகளுக்கு கடத்துவதும் நடக்கிறது.இந்த கீட்டமைனைத்தான்,போதை ஊசி என்றும் கூறுவார்கள்.

தற்சிறப்பாயிரம்

உலகில்,மருத்துவத்துறை என்பது புனிதமாக மதிக்கப்படும் துறை.ஒரு அடித்தட்டில் இருப்பவன்,பெரிய ரவுடி,நாட்டின் பிரதமர் என்றாலும் ஒரு மருத்துவர் என்றால்,கண்டிப்பாக மரியாதை கொடுப்பார்கள்.அந்த மருத்துவரால் பரிசோதனை தான் செய்ய முடியும்.உயிரைக்காப்பாற்றுவது மருந்துகளே!அப்பேற்பட்ட மருந்தின்மூலம்,இவ்வளவு மோசமான முறையில் கொள்ளை அடிப்பது என்பது,பிரசவ வலியுடன் இருக்கும் பெண்ணை கற்பழிப்பதற்கு சமம்.எனவே இக்கொள்ளையைக்கண்டிப்பாக தடுக்கவேண்டும்.ஆனால் அதை எப்படி,எங்கு முறையிடுவது என்பது,உங்களைப்போலவே எனக்கும் தெரியவில்லை.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நாடினாலும்,எங்கள் ஊரில் சரியான விளக்கமில்லை.உங்களில் யாருக்காவது இதைப்பற்றி தெரிந்தால்,தயவு செய்து கூறிவிட்டு செல்லுங்கள்.உங்களுக்கு புண்ணியமா போகும்.

 தொடர்பான பதிவுகள்

கள்ளக்காதலும் சீரழியும் சமூகமும்

முறைகேடான திருமணங்கள்

ஏழைகளின் வண்டலூர்

Comments

  1. Replies
    1. நன்றிங்க!! ஆனா இன்னமும் நான் கடைசியா கேட்டட கேள்விக்கு பதில் கிடைக்கலை!!!

      Delete
  2. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்