Posts

Showing posts from October, 2014

Eternal Sunshine Of Spotless Mind - சினிமா விமர்சனம்

Image
என்றுமே இனிய முடிவுகளை உடைய திரைப்படங்கள் நம் மனதிற்கு ஒரு சந்தோஷத்தை தரும் . அதிலும் காதல் திரைப்படங்கள் என்றால் சொல்லவா வேன்டும் ? அப்படி ஒரு இனிமையான காதல் அனுபவமே இந்தத்திரைப்படம் . நாம் காலையில் கண்விழிக்கிறோம்.அந்தநாள் நமக்கு வாழ்வின் முக்கியமான நாள்.நம் வாழ்வில் விரும்பி இழந்த ஒருவர் நினைவாக ஓரிடத்திற்கு செல்ல நினைக்கிறோம்.அச்சமயம் பார்க்கிங்கில் உள்ள நம் காரோ அல்லது பைக்கோ ஆக்சிடன்ட் ஆகி உள்ளது. பார்த்ததும் டென்சனாகி,வேறு வழியின்றி மனம் போன போக்கில் ரயில்வே ஸ்டேசனோ பஸ் ஸ்டாண்டோ செல்கிறோம்.நாம் போக வேண்டிய இடத்திற்கு வரும் பஸ்ஸையோ ட்ரெயினையோ விட்டு வேறு பஸ் (அ) ட்ரெயின் ஒன்றில் ஏறும்படி மனம் சொல்கிறது.மனம்போன போக்கில் ஒரு கடற்கரைக்கு செல்கிறோம்.அங்கே திடிரென்று ஒரு பெண் நம்மை கவர்கிறாள். அவளைப்பார்த்தாலும் பேச ஒரு பயம். ஆனால் பயணத்தின் போது அதிசயமாக அவளே வந்து பேசுகிறாள்.அவளை நமக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அன்று நாள் முழுவதும் அவளுடன் கழிக்கிறோம்.அவளை திருமணம் செய்ய மனம் விரும்புகிறது.அவளும் நம்மை விரும்புகிறாள் என்று அறிகிறோம். அடுத்த நாள

PUSS IN BOOTS - சினிமா விமர்சனம்

Image
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதைகள் FAMOUS.எடுத்துக்காட்டாக நம் ஊரில் ‘ஒரு ஊர்ல’எனத்தொடங்கும் பல ராஜாக்கதைகள்.அந்த மாதிரி இத்தாலி மற்றும் ப்ரான்ஸ் நாட்டில் கய்வான்னி ப்ரான்ஸிஸ்கோ ஸ்ட்ராபரோலா  மற்றும், ஜியாம்பட்டிஸ்டா சார்லஷ் பெர்ரால்ட் எனும் கதாசிரியர்களால் 1729 ல் MASTER CAT (OR) THE BOOTED CAT என்று வடிக்கப்பட்ட கதையே இது. உங்களுக்கு பூனை என்றால் மிகப்பிடிக்குமெனில் இத்திரைப்படம் உங்களை அட்டகாசப்படுத்தும்.ஏனெனில் இந்த கதையின் ஹீரோ ஒரு பூனை.அதுவும் சிம்மக்குரலில் பேசி,பாவ முகத்தைக்காட்டி,ரவுடியிசம் செய்யும் பூனை. சரி படத்தினுள் செல்லலாம். முதல் காட்சியில் ‘WANTED(க்ரிமினல்)’லிஸ்டில் உள்ள ஒரு அழகிய பூனை நமக்கு தத்ரூபமாக அறிமுகமாகிறது. அது ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்து தப்பித்துப்போவது போல் அறிமுககாட்சி.அது தப்பித்து ஒரு பாருக்கு செல்கிறது.அங்கு சிலரின் உரையாடல்கள் மூலம் JACK&JILL என்ற தம்பதியினரிடம் மாயவிதைகள் உள்ளதாகவும் அதன்மூலம் வானத்தில் உள்ள பொன்முட்டையிடும் வாத்தைக்கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆகலாம் என்பதையும் தெரிந்து கொள்கிறது. PUSS – ற்கு , ஒருவிதத