Posts

Showing posts from 2015

78 ரூபாய் – சிறுகதை

Image
‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’ அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. ‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான். ‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே

புலி – சினிமா விமர்சனம்

Image
எச்சரிக்கை – இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டசி என்பதால் , இதற்கான என் விமர்சனமும் ஃபேன்டசியாகவே இருக்கும். அங்கே, இங்கே என்று சுற்றிவளைத்து , உங்களின் நேரத்தை வீணடித்து, உங்களை ரணமாக்காமல் நேராக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். பொதுவாக நான் விஜய் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. காரணம், என்னை நான் அஜித் ரசிகன் என்று பொதுவெளியில் பிரகடனப்படுத்தியபின்பு , விஜய் திரைப்படங்களுக்கு எழுதப்படும் விமர்சனம் கண்டிப்பாக நடுவுநிலையில் இருக்காது என்று மற்றவர்களால் கூறப்படும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்படும் நிலை உள்ளது. ஒருவேளை படம் நன்றாக இல்லை என்பதனை அப்படியே எழுதினால் , ‘நீ ஒரு அஜித் ரசிகன்; அதனால் தான் எங்கள் தளபதி படத்தைத் தரக்குறைவாக எழுதுகிறாய் ’ என்ற கம்ப்ளைன்ட் வரும். இங்கே நான் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் நான் அஜித் ரசிகன்; ஆனால் விஜய் ஹேட்டர் கிடையாது. காவலன் திரைப்படத்திலிருந்து அனைத்து விஜய் திரைபடங்களையும் முதல்நாள் முதல்ஷோ என்ற ரேஞ்சில் (ஜில்லா தவிர) பார்த்துவருகிறேன். சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் தன்னை அஜித் ரசிகன் என்று கொக்கரித்துவிட்டு, எப்போது பார்த

தெருவில் ஒரு சிறுவன் – குறும்பட விமர்சனம்

Image
உங்களுக்கெல்லாம், ஐ மீன் என் ப்ளாக்கை வாசித்து வருபவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் சிறிய ஆச்சரியாமாவது  கண்டிப்பாக இருக்கும்; என்னடா இவன், ஒலகசினிமா, ஹாலிவுட் சினிமா என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவன் திடுதிப்பென குறும்படத்திற்கு விமர்சனம் எழுதவந்துவிட்டானென்று. ஏற்கனவே பலமுறை யோசித்து எழுதாமல் விட்ட டாபிக் குறும்பட விமர்சனம். நேற்றிரவு மூறையின் ஏதோவொரு நியூரானில் உறங்கிக்கிடந்த அந்த யோசனையைத் தட்டியெழுப்பி, அதற்கு விட்டமின் ஊட்டி வளர்த்தி, இப்போது எழுதவைத்துவிட்டார் இப்படத்தின் இயக்குநர் சனாதனன். ஏற்கனவே சாதித்தவர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் , சாதிக்கப் போகிறவர்களைப் பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று சைலன்டாக அவர் கேட்ட கேள்வி பசுமரத்தாணி போன்று மூளையில் பதிந்துவிட்டது. அவர் கேட்பதும் வாஸ்தவம் தான். சினிமாவிற்கு இருக்கும் மீடியா சப்போர்ட்டில் 0.1 சதவீதம் கூட குறும்படங்களுக்கு இல்லை என்பதே 100 சதவீத உண்மை. சரி, இன்றிலிருந்து மாதம் ஒரு குறும்படத்தையாவது நம் வாசகர்களுக்கு (?) அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற தலையாய கொள்கையை நெஞ்சினுள் விதைத்து, அதை இன்றிலி

தனி ஒருவன் – சினிமா விமர்சனம்

Image
ஒரு பக்கா ஆக்சன் - திரில்லருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதற்குமுன் ஒரு குட்டி ப்ளாஷ்பேக் . நானும் என் நண்பனும் தினமும் மாலை வேளையில் ஜிம்மிற்கு செல்வோம். வியாழன் மாலை அப்படிச்செல்லும் போது வழயில் தனி ஒருவன் போஸ்டரைப் பார்த்தோம். ‘ரவி  வரிசையா படம் நடிச்சே தள்ளிட்ருப்பாரு போல இருக்கே’ என்றவாறு;பாரேன்! ரவி கூட வரிசையா படமா நடிச்சி தள்ளுறாரு. இவரு அண்ணன் வேலாயுதத்தோட போனவரு! இன்னும் ஆள காணோம்’ என்றவாறு பரிதாபப்பட்டுக்கொண்டே வந்துவிட்டோம். எப்போதும் டி.வியே பார்க்காத நான் எதேச்சையாக அன்றிரவு டி.வி பார்க்கும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டு, மனதுக்குள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் தனிஒருவன் ட்ரைலரைப் பார்த்தேன். ட்ரைலர் செம ஸ்டைலாக இருக்கிறதே! படமும் நன்றாக இருக்குமோ? என்றவாறே நினைத்துக் கொண்டு என் நண்பனிடம் அன்றிரவே கூறினேன். அவன், ‘யாரு டூட் டைரக்டர்?’ என்று கேட்க, தெரியவில்லை என்று கூறிவிட்டால், நீயெல்லாம் ஒரு சினிமா அனலைசர் என்று காறித்துப்பி விட்டால் என்ன செய்வதென்பதற்காக, புதுடைரக்டர் போல இருக்குடா என்று கூறினேன். ரிசல்ட் வரட்டும் டூட்! பாக்கலாம் என்ற

MISSION IMPOSSIBLE 5 – சினிமா விமர்சனம்

Image
                              ROUGH NATION முதலில் ஒரு மன்னிப்பு ! வெறித்தனமாக ப்ளாக்கில் இயங்கிவந்த நான் சிலகாலமாக ப்ளாக்கில் எழுதுவதையே மிகமிக குறைத்துவிட்டேன் . காரணம் பெரிதொன்றுமில்லை ; ஒருபக்கம் பர்சனலாக பற்பல பக்கங்களுக்கு எழுதிக்கொண்டிருப்பதாலும் , வலைச்சரத்தில் தொடர்ச்சியாக இருவாரங்கள் எழுதிவந்தமையாலும் ஏற்பட்ட சோர்வே ! இனிவரும் காலங்களில் தொடர்ந்தாற்போல் எழுத உங்களின் ஊக்கம் தேவையென்பதை வேண்டிக்கேட்டுக் கொண்டு இத்திரைப்படத்தினைப் பற்றிப் பார்க்கலாம் . என் சோம்பேறித்தனத்தின் உச்சப்பட்சம் எதுவென்றால் இன்றைய மாதம் தான் . தொடர்ந்தாற்போல் நான்கு மிஷன் இம்பாஸிபிள் சீரிஸையும் , ஜேம்ஸ் பாண்ட் சீரிசையும் தொடர்பதிவாக எழுத மூன்று மாதங்களுக்கு முன்பே ப்ளான் பண்ணியிருந்தாலும் எழுதமுடியாமல் போய்விட்டது . மிக முக்கியமாக நான் விரும்பும் சீரிஸ்களில் மிஷன் இம்பாஸிபளுக்கு என்றும் தனியிடம் உண்டு . என்ன காரணமென்று யோசித்தால் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை ; நம்மை ஆச்சரியப் படுத்தவைக்கும் கதையோ , திரைக்கதையோ இதுவரை வந்த எம்.ஐ சீரிஸ் படங்களில் இல்லை . அதிலும் குறிப்பாக லாஜிக் என்ற வஸ்துவை

TERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்

Image
ஒரு பேட்டியில் கேமரூனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதாகப்பட்டது நீங்க ஏன் தலீவரே ரெண்டு பார்ட்டோட டெர்மினேட்டர் சீரிச நிறுத்திட்டிங்க என்பதே அக்கேள்வி . அதற்கு அவரும் எளிமையானதொரு பதிலைத் தந்தார் . எவ்விதமான முன்யோசனையுமில்லாமல் எடுக்கப்படும்  ஒரு திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பதே பெரிய விஷயம்; காரணம் பார்வையாளர்கள் முதல் பாகத்தினை மனதில் பலவாறாக கற்பனை செய்துகொண்டிருப்பார்கள் .  அதே கற்பனையுடன் வரும்போது இரண்டாம் பாகம் என்னதான் நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் . இரண்டாம் பாகத்திற்கே இந்நிலை என்றால் மூன்றாம் பாகத்தினைப்பற்றி சொல்லவேண்டுமா ? அவர்கள் மனதில் நிலைக்கும்படியான இரு படங்களை நான் தந்துவிட்டேன் . அது போதும் எனக்கு  என்றார் கேமரூன் .  கிட்டத்தட்ட யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே புரிந்துகொள்ளக் கூடிய விசயம்தான் இது . ஆரம்பத்தில் நம் காதலியின் சிறுபிள்ளைத்தனமான போக்கு நமக்குப்பிடித்திருக்கும் ; ஆனால் போகப் போக அதுவே நமக்கு எரிச்சலைத் தரும் .காரணம் அவளை மிக மிகப் பிடித்திருப்பது தான் . சரி விடுங்க ! சிக்மன்ட

மாரி – சினிமா விமர்சனம்

Image
         வழக்கமாக தனுஷ் திரைப்படங்களைப் பொறுத்த வரை  , இந்த படத்திற்கு செல்லலாம் , நம்மை ஏமாற்றாது என்று உள்மனது கூறும்  படங்களுக்கு மட்டுமே செல்வேன் . அந்த முடிவுடன் சென்று பார்த்த புதுப்பேட்டை , வேலையில்லா பட்டாதாரி, ஆடுகளம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்கள் அனைத்தும் பிடித்திருந்தன. அனேகன்  மட்டும் தியேட்டருக்குச்  செல்லலாம் என்று முடிவு செய்து, கடைசியில் போகமுடியாமல் முடிவை கைவிடவேண்டியதாயிற்று. மாரி பற்றி பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லை என்றே கூறலாம் . காலையில் டைப்பிங் கிளாஸ் முடித்துவிட்டு , மிகப்பொறுமையாக வீட்டிற்கு வந்தால் , பஸ் ஸ்டாப்பில் என் வயதுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தார்கள் . ’ஹே டூட் ! வாட்ஸ்அப் மேன்?’ என்று பீட்டர் விட்டுக்கொண்டே அவர்களிடம் கேட்டபோது,  படத்திற்கு செல்ல பேருந்துக்காக காத்திருப்பதாக கூறினார்கள் . அடப்பாவிகளா ! என்னைய விட்டுட்டே ப்ளான் போட்டுட்டிங்களே டா என்று மனதுக்குள் நினைத்தவாறே அடுத்த பத்து நிமிடத்தில் திரையரங்கிற்குச் சென்றுவிட்டேன் . சாதாரணமாக ரெடி ஆகி, தியேட்டருக்குச் செல்ல அரைமணிநேரத்திற்கு மே

பாகுபலி – சினிமா விமர்சனம்

Image
வெல் , ராஜமௌலியைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை . ட்ரைலர் வந்த நாள்முதல் எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் ராஜமௌலியும் அவரின் பாகுபலியும் தான் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தன . அவரின் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் முதல்  நான் ஈ வரை அனைத்துப்படங்களைப் பற்றியும் ஒரு சிறிய தொடர்பதிவு எழுதிவிடலாம் என்று எவ்வளவோ முயற்சித்தும் எழுதமுடியாமல் போய்விட்டது . இருக்கட்டும் ; இன்னும் பாகுபலியின் இரண்டாம் பாகம் வேறு அடுத்த ஆண்டு வெளிவரப்போகிறது . அச்சமயத்தில் மொத்தமாக எழுதிவிடுகிறேன் . நான் முதன்முதலில் பார்த்த தெலுங்கு படம் ராஜமௌலியின் விக்ரமார்க்குடு தான் .  படம் பார்த்து முடித்ததும் தோன்றிய விஷயம் , ரவிதேஜா பின்னிருக்காரு என்பதுதான் . பரவாயில்லையே ! ஆந்திரவாலாக்கள் கூட கிராபிக்ஸ் எல்லாம் பட்டைத்தீட்டி எடுத்திருக்கிறார்களே என்று சிறிது ஆச்சரியமடைந்த திரைப்படம் . ஏனெனில் அதற்குமுன் வரை பாலகிருஷ்ணாவின் சில படங்களையும் , சிரஞ்சீவியின் சில  படங்களையும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸில் தமிழ் டப்பிங்கில் பார்த்ததோடு சரி . அதன்பின் ஒரு ஆந்திரப்பெண்ணைக் காதலித்து , அவளுக்குத் தமிழ் தெரியாமல் போய்விட , எனக்க