FAST & FURIOUS சீரிஸ் - ஒரு பார்வை - 2



சென்ற பதிவில் முதலிரண்டு பாகங்களைப்பார்த்தோம் . வரப்போகும் 7-வது பாகத்தின் முக்கியமான மேட்டர் நடப்பதெல்லாம் மூன்றாவது பாகத்தில் தான் என்பதாலும் , காலநிலையில் ஆறாவது பாகத்திற்கு அடுத்து நடைபெற்ற கதைக்களம் என்பதால் மூன்றாவது பாகத்தை ஸ்கிப்பிவிட்டு நான்காவது மற்றும் ஐந்தாவது பாகங்களை இப்போது பார்க்கலாம் .

FAST AND FURIOUS – 2009


படத்தின் ஆரம்பகாட்சியே டொமினிக்கன் குடியரசில் ஒரு FUEL கன்டய்னர் லாரியைக்கொள்ளையடிப்பதில் ஆரம்பிக்கிறது . கொள்ளையடிப்பவர்கள் ? வேற யார் நம்ம டாமினிக் டொரேட்டோ , அவரது காதலி லெட்டி மற்றும் அவரது புதுக்கூட்டாளிகள் ஹேன் , லியோ , சான்டோஸ் , காரா . இவர்கள் அனைவரும் எதற்காக அதைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை இதற்கடுத்து வின்டீசலே இயக்கி வெளிவந்த LOS BANDOLEROS எனும் குறும்படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . தாருமாறான கிராபிக்ஸ் ஆக்சனுடன் கொள்ளை இனிதே நடந்து முடிந்தபின் , திடீரென டாமினிக்கிற்கு ஞானோதயம் ஏற்படுகிறது . ஆம் , இனி அவனுடன் இருப்பவர்களையெல்லாம் WANTED லிஸ்டில் சேர்த்து கண்ணில் விளக்கெண்ணெய் , நெய் , மண்ணெண்ணெய் உட்பட அனைத்தையும் ஊற்றிக்கொண்டு போலிஸ் தேடப்போகிறது . என்ன செய்யலாம் என்று யோசிக்கும் டாமினிக் , யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டிவிடுகிறார் . போலிசில் இருந்து ராஜினாமா செய்திருந்த பிரெய்ன் கார்னர் , மீண்டும் FBI – யில் இணைந்துவிடுகிறார் . எஸ்ஸாகி போன டாமினிக்கிற்கு , அவன் தங்கை மியாவிடம் இருந்து போன் வர , என்னவென்று பார்த்தால் டாமின் காதலி லெட்டி கொல்லப்பட்டிருக்கிறாள் .

தன் காதலியைக்கொன்றவன் யாரென ஒருபக்கம் டாமினிக் மோப்பம் பிடித்துக்கொண்டிருக்க , இன்னொருபுறம் ப்ரெய்னும் ப்ராகா எனும் போதைப்பொருள் வியாபாரியைத்தேடிக்கொண்டிருக்கிறான் . தன் காதலி இறந்ததற்கு காரணம் அந்த ப்ராகா தான் என டாமும் அறிந்துகொள்கிறான் . இந்த நேரத்தில் அந்த பேக்கு வில்லன் , தனக்கு அதிவேகமாக கார் ஓட்டக்கூடிய ட்ரைவர் தேவை என்று சொல்ல , அதில் டாமினிக்கும் ப்ரெய்னும் கலந்துகொள்கிறார்கள் . ப்ரெய்னை ஏமாற்றி டாம்னிக் முதலிடம் வந்தாலும் இருவரையும் ப்ராகாவின் சார்பாக காம்பஸ் என்பவன் ஏற்றுக்கொள்கிறான் . இதனிடையில் மியாவிடம் தன் காதலை மீண்டும் வெளிப்படுத்துகிறான் ப்ரெய்ன் . இன்னொருபுறம் வில்லன்கூட்டத்தில் இருக்கும் ஜிஸ்லி என்பவள் டாமினிக்கிடம் நன்கு பழகுகிறாள் . ஒருநாள் திடீரென காம்பஸ் அழைக்க , எல்லோரும் ஆல்ட் ஆகிறார்கள் . அவர்களுக்கு ஒருவேலையை காம்பஸ் கொடுக்கிறான் . அதாவது அமெரிக்கா பார்டரிலிருந்து மெக்ஸிகோ பார்டருக்கு மின்னல்வேகத்தில் கார்களை ஓட்டிக்கொண்டு செல்லவேண்டும் . இம்முறை ரோடு கிடையாது . ஒரு குகை . எல்லோரும் சொன்னமாதிரியே ஓட்டிக்கொண்டு டார்கெட்டை அடைகிறார்கள் . டார்கெட்டை அடைந்ததும் புதிதாக வந்த ட்ரைவர்களை போட்டுத்தள்ளுமாறு வில்லனின் ஆள் சொல்ல , அங்கே ஒரு சண்டை மற்றும் சேசிங்கினால் ப்ரெய்னும் , டாமினிக்கும் தப்பி விடுகிறார்கள் . தப்பியபின் அவர்களின் காரில் போதைப்பொருட்கள் இருக்கிறது . அதைவைத்து காம்பஸிடம் , ப்ராகாவை அழைத்துவந்தால் பொருளை வாங்கிச்செல்லாலம் என பேரம் பேச , அதற்கு காம்பஸ் ஒற்றுக்கொள்கிறான் . இவ்விடத்தில் தான் முதல் ட்விஸ்ட் . ப்ரெய்ன்   கார்னர் , லெட்டியின் சாவுக்கு தான்தான் காரணம் என்று சொல்ல , நாயடி அடிக்கிறான் டாமினிக் . லெட்டியை ப்ராகாவிடம் உளவு பார்க்க தான்தான் அனுப்பியதாகவும் , அப்படிச்செய்தால் டாம்னிக்கை சந்திக்க தான் உதவுவதாகவும் கூறியதாக ப்ரெய்ன் தெரிவிக்கிறான் . ஸ்ஸ்ஸ்ப்பா , முடியல என்று நீங்கள்  மைன்ட் வாய்ஸில் நினைப்பது எனக்கும் கேட்டுவிட்டது . இன்னும் கொஞ்சம்தான் .
ப்ராகாவைச்சந்திக்க சென்ற இடத்தில்  காம்பஸ் தான் ப்ராகா (என்னே ராஜதந்திரம் !) என்பது தெரிகிறது . வில்லன் தப்பித்து தன்னுடைய இடத்திற்கு சென்றுவிடுகிறான் . அதன்பின் 20 – க்கும் மேற்பட்ட கார்களை பறக்கவிட்டு , 8 mm –லிருந்து 80 mm வரையிலான அத்தனை குண்டுகளையும் வைத்து AK 47 , BK 47 , CK 47 என புதுப்புது துப்பாக்கிகளைவைத்து கிட்டத்தட்ட ஒரு மாபெரும் போராட்டத்திற்குப்பின்  ப்ராகாவை பிடித்து ஜெயிலில் போடுகிறான் ப்ரெய்ன் . இதற்கு உதவியாக இருக்கும் டாமினிக்குக்கு பொதுமன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோர்ட்டில் அமர்ந்தால் , ஜட்ஜ் நம்மூரு மார்கண்டேயரோட ரசிகர் போல . திடீர்னு உனக்கு 20 வருஷம் ஜெயிலுப்பானு சொல்லி மிரளவைத்துவிடுவார் . அப்பறம் சிறைக்குக்கொண்டுசெல்லும் வழியில் ......... அவ்வளவு தாங்க . மற்றதெல்லாம் அடுத்த பாகத்தில்ல வரும் .

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் அதற்குமுன் வெளிவந்திருந்த TOKYA DRIFT வசூலில் மரண அடி வாங்க , இப்படம் தேறுமா ? தேறாதா ? என்று கூட பார்க்க யாருமில்லாமல் ரிலிசானது . மிரட்டும் முதல்காட்சியிலேயே தெரிந்துவிடும் இது எப்பேர்பட்ட திரைப்படம் என்று . என்னைப்பொறுத்தவரை FF திரைப்படங்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய முதல் திரைப்படம் இதுதான் . சரி , அடுத்த படத்துக்குப்போகலாம்  .

FAST FIVE – 2011


உனக்கு 20 வருஷம் ஜெயிலுப்பானு சொல்லி மிரளவைத்துவிடுவார் . அப்பறம் சிறைக்குக்கொண்டுசெல்லும் வழியில் ப்ரெய்ன் , மியா மற்றும் அவர்களது குடும்பம் இணைந்து ஒரு பெரும் ஆக்ஸிடன்டை உண்டாக்கி , கைதிகளை ஏற்றிச்செல்லும் பஸ்ஸை பார்ட் , பார்ட்டாக பறக்கவிட்டு தியாகி டாமினிக்கைக் காப்பாற்றுவார்கள் . இப்போது வான்டட் லிஸ்டில் ப்ரெய்னும் அவன் காதலி மியாவும் இணைகிறார்கள் . அமெரிக்கா வலைவீசித்தேடுவதாலோ என்னவோ இருவரும் ரியோவுக்கு எஸ்ஸாகிறார்கள் . அங்கு முதல் பாகத்தில் பார்த்திருந்த வின்ஸ் என்பவன் அங்கிருக்கும் ஒரு பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு வாழ்கிறான் . அவன் இம்மாதியான கொள்ளையடிக்கும் வேலைகளுக்கு ஏஜென்டாக செயல்படுகிறான் . அவனின்மூலம் ஒரு வேலை டாமினிக்கின் குழுவினர்க்கு கிடைக்கிறது . அதாவது போலிசால் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை கடத்தவேண்டும் . அட இதெல்லாம் சப்ப மேட்டர்பா , என்னவிட்டா நானே அப்படியே அலேக்கா தூக்கிட்டு வந்துடுவேன்னு நீங்க கிளம்பிடாதிங்க . ஏன்னா கார்களை சீஸ் செய்து ரயிலில் கொண்டுசெல்லும்போது , ஓடும் ரயிலிலிருந்து கார்களைக்கடத்த வேண்டும் . அங்கே கடத்தும்போது தங்களுக்கு வேலையிட்ட கும்பல் ஒரு காரின்மீது அதீத ஆர்வமாக இருக்கும் . இதைப்பார்க்கும் டாமினிக் , அந்த காரில் ஏதோ மேட்டர் (அந்த மேட்டர் இல்லைங்க) இருக்கு என்றுணர்ந்து அந்த காரை தன் தங்கையை ட்ரைவ் செய்யச்சொல்லி அனுப்புகிறார் . மற்றவர்கள் எல்லாம் தப்பிக்க ப்ரெய்னும் , டாமினிக்கும் வில்லனிடம் மாட்டிக்கொள்கிறார்கள் . அங்கிருந்து தங்களின் வீரதீர சாகசங்கள் எல்லாம் பயன்படுத்தி எஸ்ஸாகிவிடுகிறார்கள் . நேராக தங்கள் தங்கையிடம் வந்து கடத்தப்பட்ட அந்த காரினுள் நோண்டும்போது ஒரு சிப் கிடைக்கிறது . அதேநேரம் வான்டட் லிஸ்டில் இருந்து ரயிலில் நடத்திய கொள்ளையால் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டுக்கு ப்ரமோசன் ஆகியிருந்த டாமினிக்கின் குடும்பத்தை , குடும்பக்கட்டுப்பாடு செய்ய நமது WWE புகழ் ராக் நியமிக்கப்படுகிறார் . அவரோ நாயைவிட படுபயங்கர மோப்பத்தில் ஈடுபட்டு டாமினிக்கின் இருப்பிடத்தைக்கண்டுபிடிக்கிறார் . அதேநேரம் வில்லன் கோஷ்டியினர் தங்கள் பங்கிற்கு கிடைத்த துப்பாக்கிகளை வைத்து டாமினிக்  , ப்ரெய்ன் மற்றும் மியாவை வளைத்து வளைத்து அவர்கள் மேல் ஒரு குண்டு கூட படாதவாறு அட்டகாசமாக அட்டாக்குகிறார்கள் . இவர்கள் மூவரும் தப்பிக்க , அனைவரும் பிரிந்துசெல்வதே நலம் என்று டாமினிக் கூறுகிறார் . ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதால் அவளுடன் கணவனும் , அண்ணனும் கூடவே இருக்குமாறு வேண்டுகிறாள் . அவளின் வேண்டுகோளை ஏற்கும் டாமினிக் அவளுடன் இருக்கச் சம்மதிக்கிறான் .

அட , சண்டைக்கு நடுவுல இத மறந்துட்டனே ! அந்த சிப்ல என்ன இருக்குமென்று பார்த்தால் , அந்த ஏரியாவுலயே பெரிய கையான ரீஸ் என்பவனின் பணம் அனைத்தும் எங்கெங்கு வைத்திருக்கிறான் என அக்குவேறு ஆனி , தேதி , கிழமை வேறாக எழுதி வைத்திருக்கிறது . அப்றமென்ன ? வில்லனும் உண்மையில் வில்லன் என்பதால் அவனிடம் கொள்ளையடிப்பது தவறில்லை என நாட்டின் பொருளாதாரத்திற்குத்தேவையான முக்கிய முடிவை டாமினிக் எடுக்கிறார்.  அதன்பின் அவனின் பணத்தைக்கொள்ளையடிக்க டீம் வேண்டுமே ? இரண்டாம் பாகத்தில் வந்த ரோமன் பியர்ஸ் ,  தெஜ் பார்க்கர் , நான்காம் பாகத்தில் வரும் ஹான் , ஜிஸ்லி , லியோ , சால்டஸ் ஆகியோரை எல்லாம் இணைத்து உலகின் மோஸ்ட் வான்டட் கொள்ளையர்கள் டீமை உருவாக்குகிறார் டாமினிக் . இவர்கள் வில்லனின் ஒரு பணக்கிடங்கை கைப்பற்றி , அங்கிருக்கும் பணத்தையெல்லாம் எரித்துவிடுகிறார்கள் . உஷாராகவேண்டும் என்ற எண்ணத்தில் வில்லன் மொத்தப்பணத்தையும் ஒரே இடத்தில் மறைத்துவைக்கிறான் . அட அப்றமென்ன ? இன்னேரம் கொள்ளையடிக்கப் போயிருப்பாங்களே என்று எண்ணிவிடாதீர்கள் . ஏனென்றால் வில்லன் பதுக்கிய இடம் நகரத்திலிருக்கும் மிகப்பெரும் போலிஸ் ஹெட் குவாட்டரஸ் . பக்காவாக எல்லா பிளானும் போட்டு எக்ஸிகியூட் செய்யும் வேலையில் டபுக்கென்று ஹாப்ஸ் (ராக்) ஊடாளப்புகுந்து பிரெய்ன் , மியா மற்றும் டாமினிக் ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள் . இந்த படத்தின் வில்லன் இருக்காரே , அவர் ஒரு மஹா கூமுட்டை . அதான் ஹாப்சே கைதுசெய்து அழைத்து போகிறாரே , விட்டதே சனியன் என்று ஜாலியாக இருப்பதை விட்டு ஹாப்சின் படையினர் மீது  தாக்குதல் நடத்த , அதில் டாம் , ப்ரெய்ன் இணைந்து ஹாப்சைக் காப்பாற்றுகிறார்கள் . தன் சகாக்களை போட்டுத்தள்ளியவனை உயிருடன் விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கும் ஹாப்ஸ் , டாமினிக்கின் டீமோடு இணைந்து வில்லன் ரீசை பிடிக்க முயற்சிக்கிறார் . தெருவுல போற சனியன , பனியனுக்குள்ள விட்டுக்கிட்டா என்ன நடக்கும் ? ரீசைப்போட்டுத்தள்ளி , ஹாப்சுக்கு அல்வா கொடுத்துவிட்டு ரீசின் பணத்தை அடித்துக்கொண்டு டாமின் டீம் தப்பிக்கிறது . அதன்பின் அடத்த பணத்தை வைத்துக்கொண்டு ஆளுக்கொருபுறம் ஜாலியாக செட்டில் ஆகிறார்கள் . படத்தின் இடையிலேயே கண்களால் காதலை வளர்த்த ஹேனும் ஜிஸ்லியும் ஒருபுறம் ஜாலியாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள் . ஹாப்ஸுடன் வேலைசெய்துகொண்டிருக்கும் ஒரு போலிஸ்காரியை டாமினிக் உஷார் செய்துவிடுகிறார் . அப்றமென்ன சுபம் தான் என்று தியேட்டரை விட்டு எழும்போது இரண்டாம் பாகத்தில் பார்த்த மோனிகா திடீர் என்ட்ரி கொடுத்து ஓரிடத்தில் தாக்குதல் நடந்ததாக ஹாப்சிடம் தெரிவிப்பாள் . என்னடானு பார்த்தா , தாக்குதல் நடத்தியவர்களின் போட்டோவில் டாமினிக்கின் காதலி லெட்டியின் போட்டோ இருக்கும் . இந்த பொன்னுக்கு நாலாம் பாகத்திலேயே பிண்டம் வச்சிட்டாங்களே ! அப்றம் எப்டினு நம்மை யோசிக்கவைத்துவிட்டு படத்தை முடித்துவிட்டார்கள் .


இப்படத்தில் எந்த காட்சி அட்டகாசமாக இருக்கும் என குறிப்பிட்டு சொல்லவே முடியாது . ஏனெனில் படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஹைஸ்பீடில் பயணிக்கிறது . சரி , அடுத்த பதிவில் ஆறாம் பாகத்தையும் மூன்றாம் பாகத்தையும் ஒருசேர பார்த்துவிட்டு FF தொடருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் .

Comments

  1. நெய் / மண்ணெண்ணெய் / விளக்கெண்ணெய் - எல்லாத்தையும் ஊற்றிக்கொண்டு மேட்டரை அலசும் ஆர்வமே அருமை... தொடர்க...

    ReplyDelete
  2. நம்ம ஊருக்கு வலியவனே போதும் ,F&F போன்ற படங்கள் ரசிக்கப் படுமா ?

    ReplyDelete
  3. படம் பார்ப்பதுபோலவே இருக்கிறது
    தமிழ் மணம் 4

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை