THE BUTTERFLY EFFECT – சினிமா விமர்சனம்



என்.டி.ஆரின் நானக்கு ப்ரேமதோ திரை விமர்சனத்தை எழுதும்போது இடையில் இத்திரைப்படத்தைப் பற்றி எதேச்சையாக குறிப்பிட்டேன். இந்த திரைப்படம் நினைவுக்கு வந்ததும் உடனே இந்தபடத்தைப் பற்றி இத்தனை நாள் எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம்தான் தோன்றியது. அப்படி ஒரு ஸ்பெசல் ட்ரீட்மென்ட் தான் இத்திரைப்படம். உங்களுக்கு பல சர்ப்பரைஸ்களைக்கொடுக்கும் வல்லமை வாய்ந்தது இந்த பட்டர்ப்ளை எஃபெக்ட்.

ஏற்கனவே நானக்கு ப்ரேமதோ திரைப்படத்தைப் பற்றிய பதிவிலே கேயாஸ் தியரியைப்பற்றியும் அதன் கோட்பாடுகளில் ஒன்றான பட்டர்ஃப்ளை எஃபெக்ட் பற்றியும் பார்த்தோம். அந்த கான்செப்டை அப்படியே வைத்து ஒரு பக்காவான திரைக்கதையை எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த திரைப்படம். கேயாஸின்படி குத்துமதிப்பான நிகழ்காலம் குத்துமதிப்பற்ற எதிர்காலத்தை உருவாக்காது என்பதைவைத்து நாம் நம் இறந்தகாலத்தை மாற்றமுனைந்தால் என்னவாகும் என்பதே இத்திரைப்படம்.

நினைத்துப்பாருங்கள்; உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமான இறந்தகாலத்துக்கு இப்போது உள்ள நீங்கள் சென்றால் என்ன செய்வீர்கள்? எடுத்துக்காட்டாக ஒரு ஐந்தாண்டுகளுக்குமுன் நீங்கள் ஒருகொலையைச் செய்கிறீர்கள். அதற்காக ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் பெறுகிறீர்கள். திடீரென இன்றைய உங்கள் நினைவுகள் ஐந்தாண்டுகளுக்குமுன் அந்த கொலை நடந்த இடத்திற்கும் நேரத்திற்கும் செல்கின்றது. அப்போது உங்களின் இன்றைய நினைவுகள் கொலையை நடக்கவிடாமல் செய்யமுயலுமல்லவா? அப்படியாக உங்கள் நினைவுகள் அந்த கொலையைத் தடுத்துவிட்டால் , அந்த கொலைக்குப்பின் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த ஐந்தாண்டுகாலமானது மாறிவிடும். ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கிவிடுமல்லவா? ஆனால் உருவாகும் புதிய எதிர்காலமானது இந்த ஐந்தாண்டை விட மிகமோசமானதாக இருந்தால் என்ன செய்வீர்கள்? மீண்டும் இறந்தகாலத்துக்கு சென்று வேறு எதாவது செய்ய முயற்சிப்பீர்கள் அல்லவா? அதேதான் இந்த திரைப்படம்.

ஒருமுக்கிய முன்குறிப்பு – வித்தியாசமான திரைக்கதை கொண்ட திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் கீழே உள்ள கதையைப்படிக்காமல் படத்தைப் பார்த்துவிடுங்கள். ஏனெனில் இவ்விமர்சனத்தில் கிளைமேக்ஸ் தவிர மற்ற அனைத்துக்காட்சிகளையும் தெளிவாக கூறப்பட இருப்பதால் படித்துவிட்டு படம்பார்க்கும்போது படத்தின் முழுமையான எஃபெக்ட் உங்களை வந்தடையாது. படம் நிகழ்காலத்தில் துவங்கி இறந்தகாலத்திற்கு சென்று எதிர்காலத்தில் முடிகிறது. ஈவன் என்பவன் ஒரு மருத்துவமனைக்குள் எங்கெங்கோ ஓடுகிறான். அவனை சிலர் துரத்த அவன் ஒரிடத்தில் அமர்ந்து ஒருவிசயத்தை மிக அவசரமாக எழுதுகிறான். அதைத்தொடர்ந்து அவனது கடந்தகாலத்தை நோக்கி திரைப்படம் பயணிக்கிறது. ஈவனுக்கு சிறுவயதில் ஒரு பிரச்சனை; அவனுக்கு திடீரென்று சிலகணங்கள் என்ன நடந்ததென்று தெரியாமல் ப்ளாக் அவுட் ஆகிவிடுகிறது. மிகமுக்கியமான 5 நினைவிழப்புகளை இங்கே வரிசைப்படுத்திவிடலாம். பின்னே வரும் கதையை புரிந்துகொள்ள இந்த வரிசை உங்களுக்கு உதவும்.

1.   பள்ளியில் அவனுடைய ஆசிரியை அவன் தாயாரை அழைத்து ‘ஓவியம் வரையச்சொன்னால் உன்மகன் என்ன வரைந்திருக்கிறான் பாருங்கள்’ என்று ஒரு ஓவியத்தைக்காட்டுகிறார். அதில் கையில் கத்தியுடன் ஒருவன் இரண்டு பேரை கொலைச்செய்ததைப்போல் வரைந்திருக்க, ‘என்னடா மவனே இது?’ என்று கேட்கும் தாயிடம் ‘எனக்கு எதுவுமே தெரியாது’ என்கிறான். சரி இவனுக்கு ஏதோ பிரச்சனை என்று ஸ்கேன்னிங் எல்லாம் எடுத்துப்பார்க்கிறார் தாயார். மேலும் இம்மாதிரியான நியாபக மறதியைச்சரி செய்யும் நோக்கில் டைரி எழுதச்சொல்கிறாள்.

2.   ஒருமுறை அவனது தாயார் ஈவனை அவனுடைய தோழி கெய்லியின் தந்தையிடம் விட்டுச்செல்கிறார். கெய்லியின் தந்தையோ ஒரு Shithead  Person (அந்த கேரக்டரை வேறு எப்படி சொல்வதென்று தெரியவில்லை; வேண்டுமென்றால் ஒரு அரைபைத்தியம் பிடித்த சைக்கோ என்று வைத்துக்கொள்ளுங்கள்). அவன் தன் மகளையும் ஈவனையும் வைத்து படமெடுப்பதாகக் கூறுகிறான். மறுபடியும் நினைவு மறக்கிறது; விழித்துப்பார்த்தால் இரு குழந்தைகளும் நிர்வாணமாக இருக்கிறார்கள்.

3.   அடுத்ததாக ஈவன் மனநிலை மருத்துவமனையில் இருக்கும் தன் தந்தையைப் பார்க்க ஆசையாய் செல்கிறான். அவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் ப்ளாக் அவுட்; திடீரென பார்த்தால் அவனின்  சொந்த தந்தையே அவனை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது அவனின் தந்தை செக்யூரிட்டிகளால் தாக்கப்பட்டு இறக்கிறார். ஈவனுக்கு இப்போது டீன் ஏஜ் பருவம் துவங்குகிறது.


4.   கெய்லி, கெய்லியின் சகோதரன் டாம், ஈவனின் நண்பன் லென்னி ஆகியோர் ஒரு டைனமைட் வெடிகுண்டை ஒரு வீட்டின் போஸ்ட்பாக்ஸில் வைத்து வெடிக்கவைக்கிறார்கள். வெடிக்கும்போது மீண்டும் ஈவனுக்கு ப்ளாக் அவுட்.

5.   சிலநாட்களில் கெய்லியும் ஈவனும் காதலிப்பதை அறியும் கெய்லியின் சகோதரன்  டாம் கோவத்தில் ஈவனின் செல்லநாயை உயிரோட கொழுத்த முயற்சிக்கிறான். அதைத்தடுக்க போகும் ஈவனுக்கு இம்முறையும் ப்ளாக் அவுட்.

என்னடா இத்தனை ப்ளாக் அவுட் என்று காண்டாகதீர்கள்; இதுவரை நான் சொன்ன கதை வெறும் 25 நிமிடங்களில் நடப்பது மட்டுமே. மேலே சொன்ன நிகழ்வுக்குப்பின் ஈவனின் தாயார் அவனுடன் வேறொரு இடத்திற்கு குடிப்பெயர, கண்டிப்பாக கெய்லியை வந்து சந்திப்பதாக கெய்லியிடம் வாக்களித்துவிட்டு கிளம்புகிறான் ஈவன்; ஆனால் அவளைச்சந்திக்கவில்லை. காலங்கள் உருண்டோடுகிறது. கல்லூரியில் படிக்கும் ஈவன் ஒருநிகழ்வில் தன் பழைய டைரியை எடுத்துப்படிக்கிறான். அந்த டைரியில் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வு டாம், ஈவனின் செல்லநாயை எரிக்கப்போகும் நிகழ்ச்சிக்கு அவனை அழைத்துச்செல்கிறது. அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்கிறான். இது உண்மைதானா என்பதை கன்பார்ம் செய்ய ஈவனின் சிறுவயது தோழனான லென்னியிடம் செல்கிறான். அவன் ஏறத்தாழ மனதளவில் பாதிக்கப்பட்டவனாக இருப்பதை அறிகிறான்; மேலும் அந்நிகழ்ச்சியை உண்மை என்றும் அறிகிறான்.

அதன்பின் மீண்டும் வேறொரு டைரியை எடுக்கிறான். அதிலிருக்கும் நிகழ்வுகளுக்கு தன் நினைவை பயணிக்க வைக்கிறான். அதன்படி அவன் செல்லும் இடம் நால்வரும் இணைந்து டைனமைட்டை ஒரு வீட்டின் போஸ்ட்பாக்ஸில் வைத்தார்கள் அல்லவா? அங்கு செல்கிறான். அந்த இடத்தில் நடக்கும் நிகழ்வு என்னவெனில் போஸ்ட்பாக்ஸை நோக்கி அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண் கைக்குழந்தையுடன் வருகிறது. ஏற்படும் வெடிவிபத்தில் இருவரும் மரணமடைகின்றனர். உடனே விழித்தெழும் ஈவன் தன்னுடைய இன்னொரு ப்ளாக் அவட்டான சிறுவயதில் கெய்லியுடன் நிர்வாணமாக இருந்ததைப் பற்றி அறிய அவளைச் சந்திக்கச்செல்கிறான். அவளுடைய வாழ்க்கையோ மிகப்பரிதாபமான நிலையில் இருக்கிறது. அவளிடம் வினவும் போது ‘என்னை ஏன் விட்டுச்சென்றாய்? உன்னை நம்பிதானே நான் என் தந்தையுடன் இருந்தேன். நீ மட்டும் இல்லையென்றால் என் தாயாருடன் எங்கோ தொலைதூரத்தில் சென்று நிம்மதியாக வாழ்ந்திருப்பேன்’ என்று அழுகிறாள். அன்று இரவே அவள் தற்கொலையும் செய்துகொள்கிறாள்.

இறந்தகாலத்திற்கு தன்னால் செல்லமுடிகிறதென்றால் அக்காலத்தையும் மாற்றமுடியும் என நம்பும் ஈவன் இம்முறை சிறுவயதின் அக்கோரமான நினைவுகளுக்கு தன் டைரியின்வழியே பயணிக்கிறான். அங்கு சென்று கெய்லியின் தந்தையை திட்டி, மிரட்டி விடுகிறான். நிகழ்வு முடிகிறது; கண்விழித்துப் பார்த்தால் இவன் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் கெய்லியுடன் படுத்துக்கொண்டிருக்கிறான்; ஆம் எதிர்காலம் மாறிவிடுகிறது.  ஆனால் இங்கும் ஒரு பிரச்சனை. கெய்லியை தொல்லை செய்யாத அவளின் தந்தை கெய்லியின் சகோதரன் டாமை தொல்லை செய்து அவனை மனநோயாளியாக மாற்றிவிடுகிறான். ஈவனை வெறுக்கும் அவன் ஈவனுடன் சண்டையில் ஈடுபடும்போது  ஈவனால் கொல்லப்படுகிறான். ஜெயில் வாழ்க்கை.

ஜெயிலில் இருந்து தன் தாயிடம் கேட்டு தன் பழைய டைரியை வாங்கும் ஈவனுக்கு அங்கிருக்கும் ஹோமோசெக்ஸ் கைதிகளால் பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரிசெய்து அவன் இப்போது செல்லும் நினைவு டாம், ஈவனின் நாயை எரிக்கப்போகும் இடம். எப்படியும் டாம் எரிப்பதை முன்னாலே அறிந்திருக்கும் ஈவன் அதைத்தடுக்கும் பொருட்டு தன் நண்பனான லென்னியிடம் சில முன்னேற்பாடுகளை சொல்கிறான். நாயைக்கொழுத்தப்போகும் முன் லென்னி, டாமை கொன்றுவிடுகிறான். எதிர்காலம் மீண்டும் மாறிவிடுகிறது. இம்முறை ஈவன் கதையின் முதல்பாராவில் பார்த்த இடத்துக்கு வந்துவிடுகிறான். ஆனால் ஈவனின் நண்பன் லென்னி, மனநோயாளிக்கான மருத்துவமனையில் கட்டப்பட்டிருக்கிறான். அதேநேரம் தன் தந்தைக்கும் இப்படியான பிரச்சனைகள் இருந்ததை அறியும் ஈவன் தன் தந்தையிடம் உதவி கேட்க கடந்காலத்துக்கு பயணிக்கிறான். அங்கு அவன் தந்தையிடம் ஹெல்ப் கேட்க, அவரோ நீ என்னதான் மாற்றினாலும் யாரையாவது நீ இழந்தே ஆகவேண்டும். உன்னால் அது முடியாது, ஒழுங்காய் இதை விட்டுவிடு என்று கூற அதைக்கேட்காமல் நான் பார்த்துக்கொள்வேன் நீங்கள் ஐடியா கொடுங்கள் என்கிறான். இவனால் பெரும் ஆபத்து நிகழும் என்று ஊகித்த அவனது தந்தை அவனைக் கொல்ல வருகிறார். அதன்பின் நடப்பதை முன்பே பார்த்துவிட்டோம். செக்யூரிட்டிகளால் கொல்லப்பட்டு அவனது தந்தை இறக்கிறார்.

மீண்டும் நிகழ்காலத்துக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் ஈவன் , கெய்லியைச் சந்திக்கச்செல்கிறான். அவளோ ஹிப்பியாக மாறிவிடுகிறாள் (ஹிப்பி கலாச்சாரம் என்றால் ஜாலியாக போதைமருந்துகள் எடுத்துக்கொண்டு தன் இஷ்டத்துக்கு வாழும் கலாச்சாரம் என்று சொல்லலாம்). இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த ஈவன் இம்முறை செல்வது போஸ்ட் பாக்ஸில் பாம் வைத்த நிகழ்விற்கு. அங்கு சென்று கைக்குழந்தையுடன் இருக்கும் அப்பெண்ணை காப்பாற்ற முயலுகிறான். எதிர்காலம் மீண்டும் மாறுகிறது. இம்முறை டாம், ஈவனின் தோழனாக மாறுகிறான். அவன்தான் அப்பெண்ணையும் அக்குழந்தையையும் காப்பாற்றுகிறான் என்று எல்லோரும் புகழ்வதால் அவனுடைய தீய குணங்கள் மாறி நல்லவனாக மாறுகிறான் டாம். ஆனால் பெரிய பிரச்சனை என்னவென்றால் வெடிவிபத்தில் ஈவனின் இரு கைகளும் கால்களும் போய்விடுகிறது. இதைவிடக்கொடுமை என்னவென்றால் லென்னியும் கெய்லியும் காதலிக்கிறார்கள். சரி, நமக்கு என்னவானாலும் சரி, மற்றவர்கள் அனைவரும் நல்ல நிலமையில் இருக்கிறார்கள் என சந்தோஷமடையும் ஈவன் தன் தாயைச் சந்திக்கச்செல்கிறான். அவள் மருத்துவமனையில் கேன்சரினால் பாதிக்கப்பட்டு சாகும்நிலையில் இருக்கிறாள். இவனுக்கு கை,கால் போனதிலிருந்து சிகரெட் போன்ற போதைவஸ்துக்களின் பழக்கத்தால் இவள் இப்படி ஆகிவிட்டாள் என்பதை அறியும் ஈவன் இம்முறை எப்படியாவது எல்லாவற்றையும் சரிசெய்தாகிவிடவேண்டுமென கிளம்புகிறான்.

அவன் மீண்டும் செல்வது குழந்தைப்பருவ நிகழ்ச்சிக்கு. கெய்லியின் வீட்டில் அவளின் தந்தையை மிரட்டும் நிகழ்விற்கு செல்கிறான். ஏற்கனவே அந்த போஸ்ட் பாக்ஸில் வெடிக்கவைக்கப்படும் டைனமைட் கெய்லியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது தான். அந்த டைனமைடை வைத்து பயமுறுத்தலாம் என்றெண்ணும் ஈவனின் கால்குலேசன் தவறாகிப்போக, வெடிவிபத்தில் சிக்கி கெய்லி இறந்துவிடுகிறாள். இவனை மனநோயாளியாக சிறையில் அடைத்துவைத்து விடுகிறார்கள். இப்போது பெரும் பிரச்சனை என்னவென்றால் அவனால் கடந்தகால நிகழ்வுகளுக்கு செல்லமுடியாது. ஏன் தெரியுமா? அவனுடைய டைரிகளை வைத்துத்தான் அவனால் பழைய நிகழ்வுகளுக்கு செல்லமுடிந்தது. ஆனால் கெய்லியின் வீட்டில் நடந்த நிகழ்வுகளுக்கு பின்தான் அவனது டைரியின் பெரும்பகுதி எழுதப்பட்டிருக்கும். ஆனால் கெய்லியின் வீட்டில் நடந்த வெடிவிபத்தினால் அவன் அப்போதே ஜெயிலில் அடைக்கப்பட்டுவிட்டான் என்பதால் டைரியை எழுதமுடியாது. இதையெல்லாம் எப்படி சரிசெய்து மீள்கிறான் என்பதே கிளைமேக்ஸ்.

   
க்ரப்பர், எரிக் ப்ரஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, இணைந்து இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2004. இருவரும் ஏற்கனவே ப்ளன்ட் எனும் திரைப்படத்தை எழுதிதயாரித்துள்ளனர். ஆனால் இருவரின் பெயரும் வெளியில் தெரிய மிகமுக்கியமான காரணம் FINAL DESTINATION திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான். ஆம் அதை எழுதியவர்கள் இவர்களிருவரும் தான். அதைத்தொடர்ந்து இயக்கி வெளிவந்த இத்திரைப்படம் விமர்சனரீதியாக பலத்த அடிவாங்கியது. ஆனால் வசூல் ரீதியில் நல்ல ரிசல்ட். ஆனால் என்னைப்பொறுத்தவரை இத்திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் கொண்டாடப்படாமல் போனதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. எல்லோரும் புரியவில்லை என்று சொல்வதுகூட அபத்தம். வலிமையான திரைக்கதையில் எளிமையான உத்தியைக் கையாண்டுள்ளனர்; அவ்வளவே.  

படத்தில் திரைக்கதையைத் தாண்டி கவனிக்கவைத்தவர் ஹீரோயின் எமி. ஒவ்வொரு காட்சியும் உள்வாங்கி நடித்துள்ளார். பாரில் வேலை செய்யும் பெண்ணாக, ஹிப்பியாக, ரிச்சான கல்லூரி பெண்ணாக, நல்ல தோழியாக, காதலியாக என அனைத்தையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார். பாரில் வேலைசெய்யும்போது தெரியாமல் பொருளை கீழே தவறவிட்டு அதை மீண்டும் எடுக்கும்போது அருகிலிருப்பவன் அவளின் பின்புறம் கையை வைத்ததும் உடனே கோவப்பட்டு, தன் நிலையை உணர்ந்து அமைதியாகி ஒரு வெறுமையான சிரிப்பை உதிர்த்து விட்டு நகரும் இடத்தில் க்ளாஸ். அதைத்தொடர்ந்து ஹீரோவை பலநாட்களுக்குப்பின் பார்த்ததும் முகத்தில் ஆச்சரியத்தைக்காட்டி, தொடர்ந்த காட்சிகளில் என்னை ஏன் விட்டுச்சென்றாய் என அழும்போது காட்டும் முகபாவங்களும் அருமை. ஹீரோவைச்சுற்றியே படம் நகர்ந்தாலும், ஹீரோவின் முகம் செட்டானாலும் நடிப்பு போதவில்லையோ என்று தோனும்படியான நடிப்பு ஆஷ்டனுடையது. ஆனால் எப்படியோ சமாளித்துவிடுகிறார். படத்தின் இசை, ஒளிப்பதிவு எல்லாம் ஒரு லோ பட்ஜெட் திரைப்படத்துக்குண்டானதே. கவனிக்கவைக்கும்படியானது எடிட்டிங். ஒரு காட்சியையும் மிஸ் செய்யாமல் தெளிவாய் கத்தரித்து ஒட்டியுள்ளார் பீட்டர்.

திரைப்படம் பார்க்கும்முன் கவனிக்கவேண்டியவை – படத்தின் ஓரிடத்தில் நிர்வாணக்காட்சி வருகிறது (ஹீரோயினோடது இல்ல). டீன் ஏஜில் இருக்கும் இருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் முத்தமிடும் காட்சி வருகிறது. ஹீரோவின் நண்பராக வரும் ஒரு காட்ஜில்லா மேட்டர் செய்யும் காட்சி இரண்டு இடத்திலும், ஹீரோவின் நண்பரும் ஹீரோயினும் மேட்டர் செய்யும் ஒரு காட்சியும் இடம்பெறுகிறது. அதனால் குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தால் சென்சார் கட்டுடன் கூடிய ப்ரிண்ட் தரவிறக்கிக்கொள்ளவும். இதைத்தவிர படத்தை ஆரம்பித்துவிட்டால் நடுநடுவே PAUSE செய்துவிட்டு போவதைத்தவிர்க்கவும். முழுதிரைப்படத்தையும் ஒரே மூச்சில் பார்த்துவிடுவது நலம்.




Comments

  1. இந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்ததா அன்பு நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இல்ல தல. தமிழ் டப்பிங் இல்லைனு நினைக்கிரேன். முடிஞ்சா தமிழ்ராக்கர்ஸ் சைட்ல தேடிப்பாருங்க. பட் கிடைக்கரது கஷ்டம்தான். படமே கனடாவ தாண்டி ரிலிசாகலனு நினைக்கிரேன்.

      Delete
  2. இந்தப் படத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன்..
    இங்கே கோனார் தமிழுரை பொழிப்புரை எல்லாம் படித்தாயிற்று இனி மீண்டும் பார்த்து
    அதைவிட காண்டு என்னவென்றால் இந்தப் பதிவை எழுதிய புள்ளையாண்டானைவிட நல்லா வேறு எழுதணும்...
    அது முடியாது என்பதுதான் ஊருக்கே தெரியுமே

    இருந்தாலும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்