Posts

பைரவா – சினிமா விமர்சனம்

Image
அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர் என்றதும் டரியலே ஆகிவிட்டேன். டீசரும் ட்ரைலரும் கொஞ்சநாட்களாக விஜய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘காடுனா புலி! வூடுனா கரடி’ விஜயை மொத்தமாக ஏலமெடுத்தது போலிருக்க, பாடல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காலையில் பிகைன்ட் வூட்ஸ் மற்றும் சில ப்ளாக்கர்களின் விமர்சனங்கள், இதுக்கு சுறாவே தேவலாம் என்ற ரீதியில் வெளிவர, இருமனமாகவே திரையரங்குக்குள் சென்றேன்.   கதையை என்னவென்று சொல்வது; தலயும் தளபதியும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. யாருக்கோ நடக்கும் பிரச்சனையில் வான்டேடாக வண்டியிலேறி ரவுடி அவதாரம் எடுப்பதையே கடந்த சில திரைப்படங்களாக இருவரும் கையான்டு வருகின்றனர். அதேரீதியில் தான் காதலிக்கும் பெண்ணிற்கு இருக்கும் பிரச்சனையை தானே தலையிலேற்றி (‘விக்’க சொல்லல) அதை வழக்கம்போல தீர்த்து சுபம் போட்டுவிடுகிறார்கள். இடையிடையே காமெடியைப் பொழிய நண்பன், காதலியுடன் காதல் எபிசோட், ஆக்சன் எபிசோடுக

சிறந்த பக்தன் - சிறுகதை

Image
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன். ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் களமன். அந்த பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது. இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட  பிடிக்கமுடியவில்லை. ‘என்ன சிந்தனை முத்தண்ணா?’ ‘எல்லாம் உன் தமக்கையை எண்ணித்தான்.’ ‘அவளுக்கென்ன? பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’ ‘நீ அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்; பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’ ‘இது இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’ ‘நம் தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’ ‘என்ன மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும் கிடைக்காது முத்தண்ணா’ ‘இப்போது மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’ ‘சரி வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்தின்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

Image
பொறாமை – தன் சகமனிதன் தன்னைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் நமக்குள் அரிப்பெடுத்து அலையும் உணர்ச்சி. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். அதேநேரம் நம்மைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் ஆண்களின் எண்ணம் அதை அடைந்தே ஆகவேண்டும் என்ற கோரவெறி. அடைய முடியாவிட்டால் உயர்ந்தவரை தாழ்மைப்படுத்த வேண்டும் என்ற சிறுமைத்தனம்.  இது எல்லா மனிதர்களுக்குள்ளும் புதைந்துகொண்டிருக்கும் மிருகத்தனத்தின் எச்சம். அது வெளிப்பட்டால்? அதனால் பாதிக்கப்பட்டால்? அப்படி பாதிக்கப்பட்டவள் தான் மலெனா. அதற்குமுன் உலகசினிமாக்களில் ஈரானியத் திரைப்படங்களைத் தவிர வேறு எந்த மொழிப்படங்களைப் பார்ப்பதாய் இருந்தாலும் தனியாகவே பாருங்கள். அற்புதமான படம் என்பதால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் (!) என்று நினைத்தால் ஜிகிர்தண்டாவில் வரும் வேட்டையாடு விளையாடு கிளைமேக்ஸ் தான் உங்கள் வீட்டிலும் நடக்கும். அதிலும் இத்தாலிய, ப்ரெஞ்ச் திரைப்படங்கள் என்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டே பாருங்கள். எந்த இடத்தில் இருந்து காம மொனகல்கள் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. பேசிக்கொண்டே இருப்பார்கள்; பட்டென்று உடைய

JAFFER PANAHI-யின் THE WHITE BALLOON – சினிமா விமர்சனம்

Image
சினிமா என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல; அது ஒரு கலை. காவியத்திற்கு சரிசமமான மற்றொரு உறுதியான, எளிமையான வடிவம். அது நாம் சார்ந்த இனம், மொழி, மதம், நாடு என எல்லாவகையான பரிமாணங்களையும் கலாசாரத்தோடும் பாரம்பரியத்தோடும் பிண்ணப்பட்டிருக்க வேண்டும். இதை ஈரானியர்கள் உணர கிட்டத்தட்ட 60 வருடங்கள் பிடித்தது. ஒரு குறிப்பிட்ட அழுத்ததிற்கு மேல் வெடித்துச் சிதறும் எரிமலையாய் 90-களில் வெடித்து சிதறியது ஈரானிய சினிமா அலை. உலகின் மிகக் கட்டுபாடுகளுக்குட்பட்டு திரைப்படங்கள் எடுக்கப்படும் இடமாக தாரளமாக ஈரானை சொல்லலாம். ராணுவ ஆட்சி, மதக்கட்டுப்பாடு, பழமைவாதிகள், போர், அரசியல் காரணங்கள் என வெளிப்படையான பல பிரச்சனைகளுக்கிடையே கதை எழுதுவதிலிருந்து சென்சார் வரை என ஏகப்பட்ட மறைமுக பிரச்சனைகளைத் தாண்டியே ஒவ்வொரு ஈரானியத் திரைப்படமும் இன்றுவரை வெளியாகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் எனில் நேரடியாக தயாரிப்பாளரை அணுகி படத்தை எடுத்துவிட முடியாது. கதையை அரசிடம் காட்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக செய்யவேண்டும். எனக்குத் தெரிந்து எழுதும் கதைக்கே தணிக்கை குழு இருந்த ஒரே சினிமா ஈரானிய

அச்சம் என்பது மடமையடா – சினிமா விமர்சனம்

Image
ஒரு நாவலின் சாராம்சம் கெட்டுவிடாமல், அது கொடுக்கும் தாக்கத்தை அப்படியே திரையில் காட்டும் வல்லமை வெகுசிலருக்கே அமையும். ஆங்கிலத்தில் மார்ட்டின் ஸ்கார்சேசே இதில் வல்லவர். ஒரு நாவலின் முழுமையான திரைவடிவத்தை அவர் திரைப்படங்களில் காணலாம். அந்த திறமை வாய்த்த தமிழின் ஒரே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மட்டுமே. அவரின் திரைப்படங்களுல் வேட்டையாடு விளையாடு, மின்னலே, நடுநிசி நாய்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் ஒரு நாவல் வாசிக்கும் அனுபவத்தைத் தரக்கூடியது. படத்தில் வரும் மெயின் கேரக்டர்களின் மனதையும் நம்மிடம் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துவார். அதுதான் கௌதம். ஆனால் எது ஒருவரின் திறமையோ, அது அவரின் மிகப்பெரிய மைனஸ் பாயின்டாகவும் இருக்கும். கௌதம் வெளிப்படுத்தும் இலக்கியத் தன்மையை, அவருடைய கதாபாத்திரங்கள் நொடிக்கு ஒரு முறை கூறிக்கொண்டே இருக்கும். ஒருநிமிடம் கூட நமது காதுக்கு ரெஸ்ட் கிடைக்காது. எதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த கொஞ்சநஞ்ச ரெஸ்ட் மட்டும் நமக்கு விட்டால் போதும்; கௌதமால் ஆகச்சிறந்த இலக்கிய படைப்பை உருவாக்கிவிட முடியும். படத்தின் ட்ரைலரை வைத்தே கதையை எல்லோரும் புரிந்துகொண்டி

SOURCE CODE - சினிமா விமர்சனம்

Image
இந்த ஹாலிவுட்காரர்கள் இருக்கிறார்களே! நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நான் எடுத்த படத்தில் முயலுக்கு இரண்டே இரண்டுகால் தான் என்று நம்மை நம்பவைத்துவிடுவார்கள். இவர்களிடம் சிக்கிய சயின்ஸ் பிக்சன் ஜானரானது நமக்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அதுவே தன்னை நினைத்து ஆச்சரியம் கொள்ளவைக்கும் அளவு ஏகப்பட்ட பிக்சன்காளால் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த ‘நேரம்’ என்ற வஸ்துவை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே! இன்னும் நேரம் என்றால் என்னவென்று தெளிவான அறிவியலைக் கண்டறிவதற்குள்ளே தங்களின் மூளையை உபயோகித்து  இவர்கள் திரைப்படத்தில் காட்டும் விசயங்களைப் பார்க்கும்போது அறிவியலறிஞர்களே வாயைப் பிளந்துவிடுகிறார்கள். சும்மா பேச்சுக்காக இதைச்சொல்லவில்லை. இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் பணியாற்றிய விஞ்ஞானி கிப் தோர்ன் , திரைப்படத்தில் வெளியான விசுவல் எஃபெக்ட்களை வைத்து வார்ம்ஹோல் பற்றிய தனது ஆய்வினை விரிவுபடுத்தியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஏற்கனவே டைம் லூப் பற்றிய பல திரைப்படங்களைப் பார்த்திர

MIRACLE IN CELL NO. 7 – சினிமா விமர்சனம்

Image
என்னதான் ஹார்ரர், சயின்ஸ்-பிக்சன், த்ரில்லர், ஆக்சன் என்று பலவகையான திரைப்படங்களைப் பார்த்தாலும் இந்த ஃபீல்-குட் திரைப்படங்கள் தரும் அனுபவம் அலாதியானது. பெரும்பாலான ஃபீல்-குட் திரைப்படங்கள் நம்மையறியமால் நம் மென் உணர்வை தூண்டிவிடக்கூடியவை. அதனால்தான் இந்த வகையறா திரைப்படங்களில் நடித்துவரும் டாம் ஹேங்ஸ் உலகின் மோஸ்ட் பவர்ஃபுல் ஹீரோவாக இருக்கிறார் (மோஸ்ட் வான்டட் ஹீரோ – ஜானி டெப்). ஃபீல் குட் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் தாராளமாய் ஏராளம் உள்ளது. ஹாலிவுட் தவிர்த்து வேற்றுமொழிகளில் வரும் அற்புதமான பல திரைப்படங்கள் தற்போது தான் நம் பார்வையில் விழுகின்றன. பாரசீக நாடுகளில் மஜித் மஜிதி போன்றோர்  கலக்கிக் கொண்டிருக்க, சைலன்டாக கொரியர்கள் உலகத்தரத்தில் பல அற்புத படைப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.  கிம்-ஜி-வூன், கிம்-கி-டுக், சான்-வூக்-பார்க் போன்றோர் எடுக்கும் திரைப்படங்கள் தற்போது உலகளவில் ட்ரென்டாகி வருகிறது. கொரியர்களின் சினிமாக்கள் அழகியலைக் கவித்துமாக பேசுகிறது. அந்த கொரியர்களின் படைப்புதான் இந்த திரைப்படம் . லீ-வான்-க்யுன்க் இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த இத்திரைப்படம் அப்போ